அட சேரன் பட நடிகை கோபிகாவா இது..?இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!!

பிரபல நடிகை கோபிகா மலையாள திரையுலகில் தான் முதலில் அறிமுகமானார்.

   

இதனையடுத்து தமிழில் ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலம் கோபிகா என்ட்ரி கொடுத்தார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த கோபிகா சேரன் இயக்கிய நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதில் கோபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த படத்தில் இடம் பெற்ற மனசுக்குள்ளே காதல் வந்துச்சா பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

தமிழில் கோபிகா நடித்த ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கோபிகா பிஸியாக நடித்து வந்தார்.

கடைசியாக Bharya Athra Pora படத்தில் கோபிகா நடித்தார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு அகிலேஷ் சாக்கோ என்பவரை கோபிகா திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

சினிமாவில் இருந்து விலகி கோபிகா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்.

இந்த நிலையில் கோபிகாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதனை பார்த்த ரசிகர்கள் நடிகை கோபிகாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.