
சன் டிவியின் விறுவிறுப்பாக ஒலிபரப்பான சீரியல்கள் ஒன்று கோலங்கள். இந்த சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அபிஷேக் சங்கர். தமிழ் சினிமாவில் மோகமுள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபிஷேக் சங்கர். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு சினிமா துறைக்கு தான் வருவதற்கு முன்பு என்ன மாதிரி வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதை குறித்தும் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது வெறும் 50 ரூபாய் சம்பளத்தில் தினக்கூலியாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதன் பின் தொடங்கி காதல் திருமணம் செய்துள்ளார்.
இவரது மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண் என்று கூறினார். மேலும் அவரது மனைவி பிறந்த இடம் மும்பை என்பதால், திருமணத்திற்கு முன், அவளிடம் ஒவ்வொரு வாரமும் அவருடன் டெலிபோனில் பேசுவேன் என்றார்.
எனவே அதற்காக தினமும் உழைத்த பணத்தில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மீதி உள்ள பணத்தை சேர்த்து வைத்து அவளிடம் தொலைபேசியில் உரையாடுவேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.