
விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் டூப் இல்லாமல் கார் ஓட்டிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அர்ப்பைஜானில் நடைபெற்று வருகின்றது. 90 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இன்னும் 25 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருக்கின்றது.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பாக தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.
அந்த வீடியோவில் நடிகர் அஜித்குமார் மிக வேகமாக கார் ஓட்டுவதும் அவருக்கு அருகில் நடிகர் ஆரவ் அமர்ந்திருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த கார் விபத்துக்குள்ளாகின்றது.
டூப் எதுவும் இல்லாமல் அஜித் தன் உயிரை பணயம் வைத்து இது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றார். மேலும் இந்த காட்சியை அந்த காருக்குள் கேமரா வைத்து படப்பிடித்து இருக்கிறார்கள்.
இந்த ஆக்சன் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிய பெறும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகிறார்கள்.