
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் நடித்து, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவர் மரணமடைந்த நிலையில்,பின் பிக்பாஸ் பிரபலம் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டு, இவர்கள் இருவரும் ஜோடியாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
தொடக்கத்தில் பாவ்னி கர்ப்பம் என்றும் கல்யாணமாகிவிட்டது என்றும் செய்தி இணையத்தில் கசிந்தது. ஆனால் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்திகள் பரவியது. நாங்கள் பிரியமாட்டோம் என்று கூறிய அமீர், அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கூறினார்.
அதன்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறோமே தவிர தனித்தனி பெட்ரூமில் தான் இருக்கிறோம் என தெரிவித்தனர். எனவே சினிமாவில் சாதித்துவிட்ட பின் தான், நாங்கள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை வாழப்போவதாக கூறிய நிலையில், அண்மையில் விஜே பிரியங்காவின் 15 கால கலை வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர்.
அப்போது அவர், எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டனர். அதற்கு அமீர் கூறி உள்ளதாவது, “ விஜய் டிவியில் நடந்த பிபி ஜோடிகளில் திருமணம் சுற்று இருந்தது. அதில் பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என நான் சொல்லி இருந்தேன். அதேபோல் உண்மையாக திருமணம் நடந்தாலும் பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுப்பார் என்று அமீர் கூறினார்.
ஏனெனில் பாவனி என்னுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் பிரியங்கா என்றும் எங்கள் திருமணம் இந்த ஆண்டு நடந்துவிடும் என்றும் அமீர் உறுதியாக கூறியுள்ளார்.