
செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை அனிதா சம்பத் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார். இதன் மூலம் ஏற்பட்ட பிரபலம் காரணமாக அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
பிக் பாஸ் வீட்டில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் சில பேச தகாத வார்த்தைகளை கூறி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். பிக் பாஸில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இவர் youtube சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அனிதா. அவரின் யூ டூப் சேனலில், இவர் தற்போது ஒரு வீடியோ போட்டுள்ளார். அது ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது, அனிதா சம்பத் அங்கே வாட்டர் ரைடுகளில் விளையாடிய சாகச வீடியோவை, வடிவேலுவின் ஆண்டனா காமெடியில் வரும் ஆன்ட்டி.. ஆன்ட்டி.. புடுங்கிருச்சு ஆன்ட்டி டயலாக்கை போட்டு ரசிக்கும்படி மாற்றி வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ..
View this post on Instagram