
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார்.
இதைத்தொடர்ந்து ‘அங்காடி தெரு’ இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம்.

கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

இவர் தற்பொழுது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரீஸ்களிலும் அதிகம் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து நடிகை அஞ்சலி பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்த நிலையில், திடீரென உடல் எடை அதிகரித்து பட வாய்ப்புகள் இல்லாமல் காணப்பட்ட பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளார் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அஞ்சலி.

இவர் தற்பொழுது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்களை செய்து வருகின்றனர்.