
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து ‘அங்காடி தெரு’ இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம். கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

இவர் தற்பொழுது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரீஸ்களிலும் அதிகம் நடித்துக் கொண்டு வருகிறார்.இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர், பொதுவாகவே ஒவ்வொரு பெண்களுக்கும் மாதவிடாய் நேரத்தில் பல வகையான வேதனைகள் ஏற்படும். இதனால் எந்த விதமான வேலைகளிலும் அவர்களால் ஈடுபட முடியாது. இன்னும் சில பெண்கள் அந்த நாட்களில் சாதாரணமான நாட்களில் எப்படி இருப்பார்களோ அப்படியே இருப்பார்கள்.
எனவே அந்த நேரங்களில் ஈரமான உடை அணிந்து கொண்டு நடிப்பது போன்ற காட்சிகள் மற்றும் மழை நீரில் நனைந்தபடி நடிக்கும் காட்சிகள் இருந்தால் கண்டிப்பா அந்த சமயத்தில் படப்பிடிப்பு வேண்டாம் என இயக்குனரிடம் கூறி அந்த மாதிரி நாட்களில் நடிப்பதை தவிர்த்து விடுவேன். இவ்வாறு அந்த பேட்டியில் அஞ்சலி தெரிவித்துள்ளார்.