
நடிகை அனுஜா ஐயர் 2007 ல் வெளிவந்த சிவி என்ற திகில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பிறகு 2009ல் நினைத்தாலே இனிக்கும், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் அழகாய் பூக்குதே என்ற பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஜா. அண்மையில் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அழகாய் பூக்குதே பாடல் பற்றிய கேள்வி எழுப்பிய போது அவர் கூறியுள்ளதாவது, இந்த பாடலுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி . நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு ஃபன் மூவி, கல்லூரி சென்ற உணர்வை எனக்கு கொடுத்தது என்றார்.
அழகாய் பூக்குதே பாடலுக்கான கிரெடிட் விஜய் ஆண்டனி சாரை மட்டுமே சாரும். அந்தப்பாடல் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டது என்றும் ஷீட்டிங் செல்லும்போது வித்யாசமாக வந்தது. பாண்டிச்சேரியிலும் ஷீட்டிங் நடந்தது. அந்தப்பாடலை படமாக்கியதே வித்யாசமான அனுபவமாக இருந்தது.
எனக்கு திருமணமான பின்பு குழந்தைகளை பெற்று வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் படங்களில் நடிக்க முடியாமல் போனது என்றார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள், உள்ள நிலையில் கணவர், மாமியாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார். மேலும் பேசிய அவர், தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளதா என கேள்வி கேட்டதற்கு, ஆர்வம் இருக்கிறது பொன்னியின் செல்வம் போன்ற வரலாற்று திரைப்படமாக இருந்தால் அந்த மாதிரி கதாபாத்திரங்களை நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.