முன்னணி நடிகையாக இருந்த அசின்… அரசியல் காரணத்தால்… சினிமா துறையில் இருந்து விலகிவிட்டாரா…!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அசின். இவர் கேரளாவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அசின். மலையாளம் இவரது தாய்மொழி . தமிழில் இவரது முதல் திரைப்படம் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அசின் சினிமாவை விட்டு ஒதுங்க பின்னணியில் நடந்த மிகப்பெரிய அரசியல்.. யாருக்கும் தெரியாத உண்மை காரணம் - Cinemapettai

   

முன்னணி நடிகர்கள் பலரின் படத்தில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்தார்.  பாலிவுட்  சினிமாவில்  சல்மான்கான் அமீர்கான் ஜோடியாகவும் நடித்தார் .கஜினி, வரலாறு, போக்கிரி,தசாவதாரம், வேல் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

நடிகை அசின்  தொழிலதிபரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகினார். திருமணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார். இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது .

இந்நிலையில் இவர் முன்பு நடிகர் சல்மான் கானுடன் ஹிந்தியில் ஒரு படத்தில்   நடிக்கும்போது இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போதுதான் இலங்கையில் ஈழத்தமிழர் போர் நடந்து லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனவே அப்போது தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு செல்லக்கூடாது என்ற கட்டளை முன்வைக்கப்பட்டன.

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை அசின் மகள்! எப்படி வளர்ந்து இருக்காருனு பாருங்க....அழகு தேவதை! - மனிதன்

அப்போது அசின் இலங்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அரசியல் காரணங்களினால் அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும், அதன் பின் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி, சினிமாவில் இருந்து விலகி விட்டதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.