
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.இதனைத் தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்த பப்லு பிரித்விராஜ், எங்களுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தற்போது நாங்கள் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என கூறினார். மேலும் இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 54 வயதில், 23 வயது பெண்ணுடன் இப்படி லூட்டி அடிப்பது அவசியமா என அனைவரும் கமெண்ட் செய்தனர்.
ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் ரசிகர் ஒருவர் ‘இருவரும் பிரிந்துவிட்டனர்’ என கமெண்ட் செய்து இருந்தார். அதற்கும் ஷீத்தல் லைக்கும் செய்துள்ளார். மேலும் பப்லு அவரது பிறந்த நாளை கடந்த வருடம் பிரம்மாண்டமாக கொண்டாடிய நிலையில், தற்போது தனியாக கொண்டாடி உள்ளதாக தகவல் வெளியானது. எனவே இதனை எல்லாம் வைத்து இருவரும் பிரிந்து விட்டதாக இணைய வாசிகள் கூறி வந்தனர்.
எனவே இது பற்றி நடிகர் பப்லு அண்மையில் பேட்டி அளித்துள்ளபோது அவர் கூறியதாவது, நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என செய்திகள் வைரல் ஆகி வருகிறது. ஆனால் பிரிந்து விட்டதாக இருவரும் ஏதாவது தெரிவித்தோமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர் என் வாழ்க்கையில நிறைய ஏமாற்றத்தை தான் சந்தித்து வருகிறேன் என்றும் இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் ஒரு முட்டாள் என்றும் அதில் பேசியுள்ளார். பின்னர் கடவுள் தமக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், சினிமா துறையில் நல்ல வாய்ப்பு, திறமை ,அழகு எல்லாம் கொடுத்திருந்தும், வாழ்க்கையை மட்டும் இப்படி அமைத்து விட்டதாக ரொம்ப பீல் பண்ணி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.