
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.நடிகர் தனுஷ் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
இவர் தற்பொழுது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவான வாத்தி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்தது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டுள்ளது. வாத்தி திரைப்படத்தை எதிர்பார்த்து நடிகர் தனுஷின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்….