பாளையத்து அம்மன் பட நடிகையா இது… இப்போ என்ன செய்றாருனு பாருங்க..!!

தமிழ் சினிமாவில் இராம நாராயணன் இயக்கத்தில் மீனா நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாளையத்துஅம்மன்’. இப்படத்தில் ராம்கி, திவ்யா உன்னி, சரண் ராஜ், செந்தில் போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

   

நடிகை திவ்யா உன்னி  கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் தந்தை உன்னி கிருஷ்ணன் தாய் உமாதேவி .இவரது தாய் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி  சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இவர் பாரம்பரிய நடனமான  பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினியாட்டம் போன்ற நடன கலைகளை பயின்றவர்.  தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார்.

நடிகை திவ்யா உன்னி சுதிர்மோனன் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள்  இருவரின் மன கருத்து வேறுபாட்டின் காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

பின்னர் அருண்குமார் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது அமெரிக்காவில் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை திவ்யா உன்னி,அங்கு  பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.