ஹாலிவுட் திரைப்படங்களை ரீமேக் செய்த நடிகர் கமலஹாசனின் தமிழ் திரைப்படங்கள்…

சினிமா உலகைப் பொருத்தவரை வேறு மொழியில் நல்ல கருத்தை கொண்ட திரைப்படத்தை அவர்களது மொழியில் மொழிபெயர்த்து திரையிடப்படுவது வழக்கமான ஒன்று தான் அப்படி ஹாலிவுட்டில் வெளியாகி திரைபடத்தை  ரீமேக் செய்து  கமலஹாசன் நடிப்பில்  வெளியான படங்களை  பற்றி  காணலாம்.

ஹாலிவுட்டில் வெளியான ‘Planes,Trains and automobilse’ இந்த படத்தின் ரீமேக் தான் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘அன்பே சிவம்’ திரைப்படமாகும்.

   


ஹாலிவுட்டில் வெளியான ‘Hardcord’ இப்படத்தில் மையக்கருத்தை மட்டும் எடுத்து 1994 ஆம் ஆண்டு வெளியான ‘மகாநதி’ திரைப்படத்தில் வைத்துள்ளார்.


1980 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில்  வெளியான ‘9 to 5’ இந்த படத்தின் ரீமேக்  தான் தமிழில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘மகளிர் மட்டும்’ இத்திரைப்படத்தை கமல் அவர்கள் தயாரித்துள்ளார்.


1993 ஆம் ஆண்டுஹாலிவுட்டில் வெளியான   ‘Mrs.Doubtfire’  இந்த படத்தின் ரீமேக் தான் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘அவ்வை சண்முகி’ திரைப்படமாகும்.


ஹாலிவுட்டில்  வெளியான ‘moon over parador’ இந்த படத்தின் ரீமேக் தான் நடிகர் கமலஹாசன் நடிப்பில் தெலுங்கில்  வெளியான திரைப்படம்  ‘இந்திருடு சந்திருடு’.அதன் பிறகு இந்த படத்தை  தமிழில் ‘இந்திரன் சந்திரன்’ என்று தமிழில் டப்பிங் செய்தனர்.

ஹாலிவுட்டில்  வெளியான ‘What about Bob?’ ரீமேக் தான் நடிகர் கமலஹாசன் நடிப்பில்  வெளியான ‘தெனாலி’ திரைப்படமாகும்.

1998 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில்  வெளியான ‘very bad things’ திரைப்படத்தின் ரீமேக்தான் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘பஞ்சதந்திரம்’திரைப்படமாகும்.


1999 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான’ The Bachelor’ இந்த படத்தில் ரீமேக் தான்  நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘ பம்மல் கே சம்பந்தம்’ திரைப்படமாகும்.


1975ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘The reincarnation of Peter proud’ படத்தின் ரீமேக் தான் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’திரைப்படமாகும்.

1948 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில்  வெளியான’Romance on the high seas’ படத்தின் ரீமேக் நடிகர் கமலஹாசன்  நடிப்பில் வெளியான ‘மன்மதன் அன்பு’ திரைப்படமாகும்.

1990 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில்  வெளியான ‘Green card’ படத்தின் ரீமேக்  கமலஹாசன் தயாரிப்பில் வெளியான’ நள தமயந்தி’ திரைப்படமாகும்.