
நடிகை மஹிமா நம்பியார் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் ‘சாட்டை’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, அசுரகுரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வரும் நடிகைகளில் ஒருவரான இவர் தற்பொழுது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இவர் ஆர்யாவுடன் நடித்த ‘மாமுனி’ படத்திற்காக ‘சிறந்த துணை நடிகைக்கான விருது’ பெற்றுள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்
மேலும் இவர் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் படமான ரத்தம் படத்தில் வில்லி ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நடிகை இவரது பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.