‘போக்கிரி’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்?… ஆள் அடையாளம் தெரியாம ஹீரோ போல மாறிட்டாரே… புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அப்படி சூப்பர் ஹிட் அடித்த  திரைப்படங்களில் ஒன்றுதான் போக்கிரி.

   

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்று வசூலில் சாதனையும் படைத்தது. இத்திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை அசின் நடித்திருப்பார். நடிகை அசினுக்கு தம்பியாக குழந்தை நட்சத்திரமாக நடித்து  பிரபலமானவர் மாஸ்டர் பரத்.

இத்திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது .மாஸ்டர் பரத் பிறந்த வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் சென்னையில் உள்ள வேளாங்கண்ணி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் கமல் நடிப்பில் வெளியான ‘பஞ்சதந்திரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததாம்.

இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.. நடிகர் விஜய் உடன் இணைந்து ‘போக்கிரி’ திரைப்படத்திலும், தனுஷ் நடித்த ‘உத்தம புத்திரன்’ திரைப்படத்திலும், மேலும் ‘மை டியர் பூதம்’ என பல திரைப்படங்கள் மற்றும் நாடகத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் தற்பொழுது ‘ரோபோடிக்ஸ்’ எடுத்து படித்துக் கொண்டு வருகிறார். படிப்பை முடித்து ஹீரோவாக களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .தற்போது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘போக்கிரி திரைப்படத்தில் குண்டா, பார்த்த  சின்ன பையனா இவர்?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.