
தமிழ் சினிமாவில் ‘சீதாராமம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோனியாக அறிமுகமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். மேலும் இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் மராட்டி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடிப்பதற்கு முன் சீரியல்களில் அதிகம் நடித்துள்ளார். இதனையடுத்து இவர் சூப்பர் 30, Batla House போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஒரு படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதினை பெற்ற போது அந்த விருது விழாவில் நடிகர் அல்லு அரவிந்த் அந்த விடுதலை அவருக்கு கொடுத்தார் மேலும் நடிகர் அல்லு அரவிந்த் கூறியதாவது, நீங்கள் விரைவில் தெலுங்கு நடிகரை பார்த்து திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும் என்றார்.
இதனால் பலர் மிருணாள் தாகூர் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்யபோகிறார் என்ற தகவலை பரப்பினர். எனவே இதற்கு பதில் அளித்த மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் யாரையும் நான் காதலிக்கவில்லை மற்றும் திருமணமும் இப்போதைக்கு இல்லை. அந்த விழாவின் போது நடிகர் அல்லு அரவிந்த் அவர்கள் விளையாட்டு தனமாக அவ்வாறு பேசினார். எனவே யாரும் அதை உண்மை என கருத வேண்டாம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.