
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவர் சின்னத்திரை நடிகையும் கூட , இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் உடன் நடித்த ‘தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும், போன்ற பல படத்திலும் நடித்துள்ளார். இவர் 30 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நன்றாக நடித்து சிறந்த துணை நடிகை விருது பெற்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலில் ஓன்று ‘மெட்டி ஒலி’. இந்த சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பெற்றார். சீரியலில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் .
இவர் கோலங்கள், இதயம், தென்றல், அரண்மனைக்கிளி ,என் தோழி என் காதலி என் மனைவி, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களையும் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நிலீமா, சிலர் எனது மார்பகம் பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் உடல் எடை பற்றியும் கேலி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் சொல்ல வேண்டியது நான் தற்போது எனது குழந்தைகளுக்கு பால் கொடுத்து வருகிறேன். அதனால் அந்த மாதிரி இருக்கும் என அவனிடம் சொல்ல தோன்றும். ஆனால் அவனுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன ஆகப்போகுது என்று நினைத்து அந்த கமெண்ட்டை டெலிட் செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை ப்ளாக் செய்துவிடுவேன்.