
தமிழ் சினிமாவில் தேவியின் திருவிளையாடல் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை பாக்கிய ஸ்ரீ. இவர் பல ஆண்டுகள் கழித்து யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவுக்கு நுழைந்த போது நடந்தவை பற்றி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
அதாவது அந்த காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் சற்று குண்டாக இருக்க வேண்டும். ஆனால் நடிகை பாக்கியஸ்ரீ 14 வயதில் சினிமாவிற்குள் என்ட்ரி ஆன போது, ரொம்ப ஒல்லியாக இருந்துள்ளார். எனவே சினிமாவில் நடிக்க வேண்டும் என நடிகை ஸ்ரீதேவி பார்த்து, சிறுவயதிலிருந்து ஆசை இருந்துள்ளது. அப்போது ஒரு ஊசி போட்டு உடம்பை குண்டாக்கி, படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன் என்று நடிகை பாக்கியஸ்ரீ கூறினார். ஆனால் அந்த ஊசியினுடைய பின்விளைவு பின்னர் திருமணம் ஆகி கர்ப்ப காலத்தில் ஏற்பட்டது.
மேலும் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால் என பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளேன். இந்நிலையில் சினிமாவின் நடித்துக் கொண்டிருக்கும் போது சீக்கிரம் திருமணம் ஆனதால், அதன் பின்னே நடிக்க இயலாமல் போனது. எனவே தற்போது சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசை வந்துள்ளது என்றும் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.