
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பிரபு.
1980ல் வெளியான சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாகவும், துணை ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார்.
தற்போது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் ஹீரோவாக நடித்து அசத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பி வாசு-பிரபு இருவரின் கூட்டணியின் உருவான குரு சிஷ்யன், தங்கச்சி படிச்சவ, அக்னி நட்சத்திரம், செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட பல தொடர் வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றார்.
அதிலும் சின்னதம்பி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதையும் அவர் பெற்றிருந்தார்.
தொடர்ந்து டூயட் ,அக்னி நட்சத்திரம், சார்லி சாப்ளின், சந்திரமுகி, அயன், தாமிரபரணி, உனக்கும் எனக்கும், மனசுக்குள் மத்தாப்பு, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றார்.
இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பிரபு 1982 ஆம் ஆண்டு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். மகன் விக்ரம் பிரபு சினிமாவில் நடித்த வருகிறார். மகள் ஐஸ்வர்யாவுக்கு தற்போது தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது .
நடிகர் பிரபுவின் பலரும் பார்த்திடாத அன்சின் புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..