
மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வளம் வந்தவர் நடிகர் ரகுமான்.
1990களில் சாக்லேட் பாயாக வளம் வந்த ரகுமான் மலையாளத்தில் கூடவிடே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் சிறந்த நடிகருக்கான கேரள மாநிலம் விருதையும் வென்றார்.
அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிக்க தொடங்கினார். தமிழில் நிலவே மலரே, வசந்த ராகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள் தமிழில் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் பில்லா முதல் பொன்னியின் செல்வன் வரை கெஸ்ட் ரோலில் நடிக்க தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.
இவர் ஏ ஆர் ரகுமான் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்.
சமீபத்தில் ரகுமான் தனது 31 வது திருமண நாளை கொண்டாடியிருக்கின்றார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..