
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, தற்போது டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தனர்.
இவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டார். இதனால் நிறைய படங்கள் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது விளம்பர படம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.