
நடிகை ஷகிலா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் கவர்ச்சி நாயகியாக நடித்து, ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமானவர். மேலும் சினிமாக்களில் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த இவர், நீண்ட வருடங்களுக்கு பிறகு “குக் வித் கோமாளி” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகிலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது பெயர் மிலா.
இவர் கடந்த வருடம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அந்த ஆசை இல்லையா என்ற கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நடிகை சகிலா, ஏன் நானும் பொம்பளா தான், எனக்கும் ஆசை இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் யாரும் செட் ஆகவில்லை என்றார். மேலும் ஒவ்வொருத்தர் கூட, 3 ஆண்டு, 4 ஆண்டு, 7 ஆண்டு, 10 ஆண்டு என வாழ்ந்து வந்தேன் என்றார்.
ஆனால் அனைவரும் என்னை விட்டு சென்று விட்டனர். இதற்கு காரணம் என்னுடைய குடும்பமா..? வாழ்க்கையா..? என பார்த்தபோது குடும்பத்தை மட்டும் நினைவில் வைத்து வாழ்க்கையை தொலைத்து விட்டேன். எனவே தான் இப்போது தனிமரமாக வாழ்ந்து வருகிறேன் என அந்த பேட்டியில் சகிலா தெரிவித்துள்ளார்.