மன்மதனுக்கு விரைவில் டும் டும்.. பிரபல வாரிசு நடிகையை திருமணம் செய்ய போகும் STR.. வைரல் நியூஸ்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் சிம்பு – 48 என்ற படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

Is Simbu getting ready for marriage? | நல்ல மணப்பெண்ணுக்காக காத்திருக்கிறேன் - நடிகர் சிம்பு

   

தற்போது இந்த படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை போல், இவருக்கு சாதாரண ரசிகர் கூட்டம் கிடையாது. அந்த வகையில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கு இருக்கக்கூடிய அளவுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் சிம்புவுக்கும் உள்ளது.

மேலும் இவர் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம், கதை, பாடல்கள் எழுதுவது மற்றும்   பாடுவது, இசையமைப்பது, திரைக்கதை எழுதுவது என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்ற கூடிய திறமை கொண்டவர். அவ்வப்போது இவரின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போதும் இவருடைய திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வரலட்சுமி. இவர் பிரபல முன்னாடி நடிகரான சரத்குமாரின் மகள். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான  ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் சிம்புவுடன் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சரத்குமாரின் முதல் மனைவியான வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? இப்ப என்ன செய்றாங்க தெரியுமா.. | Tamil360Newz

இந்நிலையில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தேருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவதால் விரைவில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என எண்ணி, சிம்புக்கும், நடிகை வரலட்சுமிக்கும் திருமணம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை.