
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது இவர் நடிப்பில் அயலான் படம் அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு உருவாகி வருகிறது.
இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று சென்னையில் நடைபெற்றதில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது “என்னை சிலர் சூப்பர்’னு சொல்வாங்க, சிலர் Inspiration’னு சொல்லுவாங்க, சில பேர் திட்டுவாங்க.. ஆனா நான் இதையெல்லாம் எடுத்துக்குறதே இல்லை. இணையத்தில் பரவும் என் ஹேட்டர்ஸை, பற்றி நான் ஒன்னுமே சொல்ல விரும்பல, என்னை புடிச்சவங்களுக்காக எப்போதும் போல என் வழியில் நான் ஓடிக்கிட்டே இருக்கேன்.” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகின்றது.