செம.. அடிதூள்.. சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர் சூர்யா.. உற்சாகமான ரசிகர்கள்…!!

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணி உரிமையாளரானார் நடிகர் சூர்யா! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

   

இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ஐஎஸ்பிஎல்லின் முதல் சீசன் அடுத்த ஆண்டு, மார்ச் 2 முதல் 9 தேதிகளுக்குள்  மும்பையில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்) உள்ளிட்ட ஆறு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக நடிகர் ராம் சரண் உள்ளார். நடிகர் ராம் சரண் ஹைதராபாத் அணியினை வாங்கிய நிலையில், இதில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகளாக நடை பெறவிருக்கும் ISPLT10 தொடரில் தமிழ்நாடு அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.