
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா இவர் மாடலிங் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.அதன் பின்னர் சினிமா துறையில் கால் பதித்தார். ‘லேசா லேசா’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான’லியோ’ படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் இந்நிலையில் நடிகை திரிஷா 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா சினிமாவில் வந்த ஆரம்ப காலத்தில் சில படங்கள் அவருக்கு தோல்வியை தந்ததால் சினிமா விட்டு விலக முடிவு எடுத்துள்ளார். அப்போது விக்ரம் உடன் நடித்த சாமி படத்தில் திரிஷாவும் நடித்து இருந்தார்.
இந்த படம் வெற்றி அடையவில்லை என்றால் இதற்குப் பிறகு சினிமாவில் இருந்து நடிப்பதே விட்டுவிடலாம் எனவும் சினிமாவிற்கு ஒரு பெரிய கும்புடு போட்டுவிட்டு சென்றுவிடலாம் எனவும் திரிஷா முடிவு எடுத்துள்ளார். ஆனால் சாமி படம் மிகப் பெரிய அளவில் மெகா ஹிட் படமாகவும் வெற்றி அடைந்தது. எனவேதான் திரிஷா சினிமாவில் தொடர்ந்து பயணித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.