வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்… ஆபத்தில் உதவ வேண்டி உருக்கம்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்  நடிகர் விஷ்ணு விஷால். இவர் TNCA லீக் கேம்களில் விளையாடி கிரிக்கெட் வீரராக மாறினார்.ஆனால்  ஒரு காலில் ஏற்பட்ட காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டு வந்தது.தன் பிறகு  சினிமாவின் மீது ஆர்வமாக இருந்தார்.

   

இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தின் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

மேலும் இவர் தமிழில் ‘பலே பாண்டியா’, முண்டாசுப்பட்டி, மாவீரன் ,ராட்சசன், எஃப் ஐ ஆர், குள்ளநரி கூட்டம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கட்டா குஸ்தி, எஃப் ஐ ஆர் ,சிலுக்குவார் பட்டி சிங்கம், கதாநாயகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களை தயாரித்தும், நடித்தும் உள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து வரும் சூழலில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று ரோபோ சங்கர் வெள்ளத்தில் காயமடைந்த வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவரின் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கிய வெள்ளநீரை வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதாகவும்,  எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். மேலும் அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.