“காஷ்மீருக்கு ஹனிமூன் சென்ற நடிகர் விவேக் மகள்”…. ஜோடியாக வெளியான வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உண்டு. சிலர் உலகை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் தற்போது வரை நிலைத்து வருகிறார்கள்.

   

அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் விவேக். தன்னுடைய நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து பல விஷயங்களை நகைச்சுவை மூலமாக புரிய வைத்தவர்.

திரை வாழ்க்கை மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் பலருக்கும் உதாரணமாக இருந்திருக்கின்றார். சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோர்களின் கொள்கையை பின்பற்றி அவர் வழியில் நடந்தவர்.

பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு அனைவருக்கும் முன்னோடியாக விளங்கியவர். சின்ன கலைவாணர் என்று பட்டத்துடன் அழைக்கப்பட்ட இவர் திரை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினார்.

திடீரென்று அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒன்றாக அமைந்தது.

விவேக்கின் மகள் தேஜஸ்வினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரத் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் எளிய முறையில் நடந்து முடிந்தது.

தந்தையின் கனவுப்படி விவேக்கின் மகள் மற்றும் மருமகன்கள் இருவரும் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் பூச்செடிகளை நட்டு வைத்து திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி இருந்தார்கள்.

தற்போது இவர்கள் ஹனிமூன் காஷ்மீர் சென்றுள்ளார்கள். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள், இந்த புகைப்படங்கள் இதோ…