மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும்.. நடிகை அபர்ணாதாஸ்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை அபர்ணாதாஸ். இவர் ஆரம்பத்தில் ஒரு கணக்காளராக பணியாற்றினார் . அப்பொழுது நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு மாடலாகவும் பணியாற்றினார். இதைத்தொடர்ந்து டிக் டாக் ஆப் மூலமாக வீடியோக்களை பதிவிட்டு  பிரபலமானார்.இதன்முலமாகக்க வாய்ப்பு கிடைத்தது . 2018 ஆம் ஆண்டு  வெளியான ‘Njan Prakashan’ என்ற படத்தில் நடித்து மலையாள  திரையுலகில் அறிமுகமானார்.

   

 

அதன் பிறகு தமிழில் வெளியான ‘பிஸ்ட்’  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.சினிமாவில் வந்து குறுகிய  காலத்திலேயே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார் . இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். ஒரு ஏப்ரல் 24ஆம் தேதி Vadakanchery என்ற இடத்தில் திருமணம் நடைபெறஉ ள்ளது.தற்பொழுது இந்த செய்தி   இணையத்தில் வைரலாகி வருகிறது.