போஸ் எல்லாம் பலமே இருக்கே…! இந்தோனேசியாவுக்கு ட்ரிப் சென்ற எதிர்நீச்சல் நந்தினி…. வைரல் புகைப்படங்கள்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹரிப்பியா வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற நிலையில் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

   

90’ஸ் கிட்ஸ்களின் பிவெர்டே சீரியல் என்றால் அது கனாக்காலம் காலங்கள். அந்த சீரியலில் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பை காட்டி அனைவரையும் கவர்ந்தவர் ஹரிப்பிரியா.

பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

பல தொடர்களில் நடித்து வந்த இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடைய காமெடியை பார்ப்பதற்கு என்று இந்த சீரியலை பலரும் கண்டு ரசித்து வருகிறார்கள்.

பெரும்பாலான சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வந்த இவர் அது வெறுத்துப் போய்விட்டதால் இனி ஜாலியான கேரக்டரில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ற வகையில் இவருடைய எதிர்நீச்சல் கதாபாத்திரம் அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இவர் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஹரிப்ரியா அவ்வபோது எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளிநாட்டிற்கு அதாவது இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பாம்புடன் விளையாடுவது போன்ற பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இதோ…