
90களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை கௌசல்யா. இவர் தமிழ் மலையாள சினிமாவில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா நிலையில் அடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தனர்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய், கார்த்திக் பிரபு , சத்யராஜ் ,போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும் பொழுது இந்த கதை நமக்கு செட் ஆகுமா?. என்பதை பல முறை யோசித்துதான் சரி என்று கூறுவாராம்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இப்படி படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை. ஒரு சில காலகட்டத்தில் ஆளையே காணவில்லை.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம்
என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்தார்.அதைத் தொடர்ந்து பூஜை,
, நட்பை துணை உள்ளிட்ட சில படங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.தற்போது இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.