நடிகை  ராதிகாவா இது?… திருமணத்தின் போது எப்படி இருந்தார் தெரியுமா?…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

   

தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார். வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார்.

சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவருடைய நடிப்பில் லவ் டுடே, பட்டத்து அரசன், ரன் பேபி ரன் போன்ற படங்கள் சமீபத்தில் வந்திருந்தன.

தற்போது இவர் வெள்ளித்திரையில் அதிகம் கவனம் செலுத்துவதால் அவர் சின்னத்திரையில் தயாரிப்பாளராக மட்டுமே இருந்து வருகிறார். நடிகை ராதிகா 2001ல் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது அவர்களது  திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ராதிகாவின்  மகள் ரயானே மிதுன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் அதில், அவரது அம்மாவான ராதிகாவின் திருமண புடவையை தான் அவரும் திருமணத்திற்கு அணிந்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…