
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கீதா. இவர் ‘கங்கோத்ரி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.இவர் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் 1998ஆம் ஆண்டு வெளியான’காதலே நிம்மதி‘ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து தமிழில் வெளியான படங்கள் வாரிசு, தமிழரசன். இவர் நடிகை மட்டுமல்ல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடுவரும் கூட. நடிகை சங்கீதா பாடகர் ஆன க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் பிரச்சனை நடக்கும் என்பார்கள்.இவர் தன் குடும்பத்தினர் தனக்கு செய்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார்.சமூதாயத்தில் தான் பிரச்சனை நடக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு என் குடும்பத்தினரே பிரச்சனை செய்தார்கள். நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தினர் எடுத்துக் கொள்வார்கள். என் அண்ணன்களே என் பணத்தை நாசம் செய்தார்கள் என்றும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் என் பணத்தை செலவு செய்து வந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் சேமிப்பு என்பதே கிடையாது. என் அம்மா கூட என் பணத்தை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்வார்கள். பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். கிரிஷை திருமணம் செய்தப்பின் தான் எல்லாமே என் வாழ்க்கையில் மாறி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நடிகை சங்கீதா ஓப்பனாக கூறியிருக்கிறார்.