வயதான தோற்றத்தில்… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை சரோஜாதேவி… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரோஜாதேவி. இவர் தமிழ் ரசிகர்களால் அபிநய சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலை பயணத்தை தொடர்ந்து அவர் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவரது பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

   

மகாகவி காளிதாஸ், நாடோடி மன்னன், கல்யாண பரிசு, பாலும் பழமும், ஆலயமணி, பெரிய இடத்துப் பெண், தர்மம் தலைகாக்கும் ,எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா என இவரின் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

பத்மஸ்ரீ, பத்மபூஷன் எனும் பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரராக வலம் வந்தவர் நடிகை சரோஜாதேவி. எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இன்றி விஜய், அஜித் என இந்த தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஒன்ஸ்மோர், ஆதவன் என இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

திரைப்படத் துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கிய நடிகை சரோஜாதேவி, தன்னுடைய நடிப்பிற்கான தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் . இந்நிலையில் நடிகை சரோஜாதேவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அவர் பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து காணப்படுகிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை சரோஜாதேவி இது? ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாங்களே? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படம்…