குழந்தையுடன் ரோட்டில் அமர்ந்து சப்பாத்தி சூடும் ஸ்ரேயா சரண்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

   

முதலில் மாடல் அழகியாக விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.

 

 

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ள பிற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

 

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் திடீரென தனது ரஷ்யாவை சேர்ந்த காதலரான ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டில் செட்டிலான இவர் பின்னர் சில மாதங்களில் மீண்டும் சினிமாவில் நடித்து வந்தார்.

 

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா தனது குழந்தையை பிறந்த விஷயத்தை கூட ரகசியமாக வைத்து இருந்தார். தனக்கு குழந்தை பிறந்த பிறகு அவரின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

 

 

 

மேலும் தன்னுடைய மகளுக்கு ராதா சரண் என்று பெயர் சூட்டி இருக்கின்றார். சமூகவலை பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்ரேயா சரண் அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது ரோட்டில் அமர்ந்து சப்பாத்தி சூடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)