பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீரஞ்சனியின் மகன்களை பார்த்திருக்கீங்களா?…  உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்களா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக, அக்காவாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருபவர் நடிகை ஸ்ரீ ரஞ்சனி. இவர் கே பாலச்சந்தரின் ‘காசளவு நேசம்’ என்ற சீரியலின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சிவரஞ்சனி.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீ ரஞ்சனி. இத்திரைப்படத்தை தொடர்ந்து அன்னியன், திமிரு, போக்கிரி, மொழி, அபியும் நானும், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, தனி ஒருவன், வேதாளம், சீமராஜா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும்  குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பாலும் நடிகர் நடிகைகளின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தே மக்கள் மனதில் இடம் பெற்றார்.

நடிகை ஸ்ரீரஞ்சனி ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மைத்ரேயன், மித்ரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது நடிகை ஸ்ரீரஞ்சனி தனது குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்காங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்…