
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் 90 களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் 1992 ஆம் ஆண்டு வெளியான’ புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒரு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தனர்.
இந்நிலையில் சுகன்யாவிற்கு ஒரு மகளும் இருக்கிறார். சினிமா துறையின் சாயமே படாமல் பார்த்துவருகிறார்.தற்போது இவர் மகளின் புகைப்படம் இணையத்தல் வெளியாகி வைரலாகி வருகிறது.