முற்றும் துறந்து.. துறவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும்  இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .இவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாவார். நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் ஓவ்வொரு  வருடமும்  இமயமலை மற்றும் மற்ற கோவிலுக்கு சென்று வருவது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகும்.

   

இந்நிலையில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடவுள் பக்தி அதிகமாக உள்ளவர்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிடுவதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.இந்நிலையில் ஐஸ்வர்யா  சமீபத்தில் ‘லால் சலாம்’படம் இயக்கியுள்ளார்.

இப்படம் இவர் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறாத நிலையில் தற்போது மனக்கவலையுடன் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் அவர்  முழுக்க ஆன்மீகவாதியாக மாறி உள்ள புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓம் நமச்சிவாயா என பேப்பரில் பலமுறை எழுதிய புகைப்படத்தை அவர் பதிவு செய்ததில் இருந்து அவர் சிவ வழிபாட்டில் தீவிர ஈடுபாட்டில் இருப்பதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் அவர் கோவிலுக்கு படியேறி நடந்து செல்வது, காசிக்கு சென்றது உட்பட பல புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தின் வைரலாகி வருகிறது.