தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ…. 42-வது பிறந்த நாளை கொண்டாடிய அல்லு அர்ஜுனின் வைரல் புகைப்படங்கள்..!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் என்பவரின் இரண்டாவது மகன் ஆவார்.

   

தந்தை தயாரிப்பாளர் என்பதால் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 2001 ஆம் ஆண்டு டாடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பின்னர் ஆர்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுக்க டாப் நடிகரில் ஒருவராக மாறிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் எந்த பாடலாக இருந்தாலும் அசால்டாக ஆடி ரசிகர்களை கவர்ந்து விடுவார். தற்போது வரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக நான்கு பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கின்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய 42-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்.

இவரின் பிறந்தநாளுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் இதோ…