3நாள் வயிற்றில்.. முதல் குழந்தை இறந்த சோகம்.. அங்காடி தெரு பட நடிகை படும் துன்பம் தெரியுமா..!!

தமிழில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அங்காடி தெரு.

   
இந்த திரைப்படம் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றும் வறுமையான கிராமத்தை இளைஞர்கள் படும் கஷ்டத்தை அற்புதமாக வெளிக்காட்டி இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் பாண்டிக்கு ஜோடியாக சோபியா என்ற  கதாபாத்திரத்தில் நடித்தவர் சுகுணா நாகராஜன்.

இந்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய நாகராஜனை சோபியா திருமணம் செய்து கொண்டார்.சுகுணா ஒரு நடிகை என்பதைத் தவிர, இன்று பியூட்டி பார்லர் உரிமையாளராகவும் இருக்கிறார். அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுகுனா தம் வாழ்க்கையில் நடந்ததை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.

அதாவது நான் அழகாக இல்லை என்பதை நினைத்து அதிக நாட்கள் கண்ணாடியை பார்த்து அழுது புலம்புவேன் என்றார். மேலும் தனக்கு கிடைத்த கணவர் அந்த அளவிற்கு நல்லவர் என்றும் அவர் என் வாழ்க்கையில் அவர் வந்த பிறகு தான், நானும் ஒரு அழகி தான் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் என் வாழ்க்கையில் நான் கர்ப்பமாக இருந்த போது, என்னுடைய முதல் குழந்தை எனக்கு எட்டாவது மாதம் இருக்கும்போது வயிற்றிலேயே இறந்தது. இதை எங்களுக்கு 3 நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் மருத்துவர்கள் கூறிய தை என்னால் நம்ப முடியவில்லை. அதன் பின்பு குழந்தையை எனக்கு கண்டிப்பாக காட்ட வேண்டும் என கணவரிடம் கூறினேன் . ஆனால் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தையை என்னிடம் காட்ட வேண்டாம் அடக்கம் செய்து விடலாம் என்று கூறினர். ஆனால் என் கணவர் இல்லை அவளுக்கு காட்டவில்லை என்றால் அவள் மிகவும் மன வேதனை அடைவாள் என எனக் கூறி குழந்தையை என்னிடம் என் கணவர் காட்டினார். என்னுடைய எதிரிக்கும் கூட இந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது. இவ்வாறு அந்த பேட்டியில் நடிகை சுகுணா பேசியுள்ளார்.