
தமிழ் சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “அன்னப்பூரணி”. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் . இப்படமானது சமையல் போட்டியை பின்னணி கொண்ட படமாக அமைந்துள்ளது.இப்படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். சமீபத்தில் இப்படம் ஓடிடி யில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், ‘லவ் ஜிகாத்தை’ ஊக்குவிப்பதாகவும் வசனங்கள் இடம்பெறுள்ளதாக கூறி புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. ராமரைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தைச் சேர்த்ததாகக் கூறப்படுவதால்மும்பையில் பட குழுவினர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த விகாரம் கூறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
அதில் அவர் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது படக்குழுவின் நோக்கமல்ல மன உறுதி இருந்தால் எதை போராடினால் எதையும் சாதிக்க முடியும் என்று உனர்த்தும் வகையில் எடுக்கப் பட்ட படம். ஆனால், எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம். மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும். இப்படம் வெறும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல, ஒரு நல்ல விசையத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்தோம் .
கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கோ, படக்குழுவுக்கோ இல்லை .20 ஆண்டுகால என்னுடைய திரைப்பயணம் ஒன்றே ஒன்று தான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவது தான் நோக்கம் என்றும் நடிகை நயன்தாரா அந்த அறிக்கையை வெளிட்டுள்ளரார்.