
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கல் முன்னிட்டு நாளை வெளியாக இருக்க படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் ,பிரியங்கா, அருள் மோகன், நிவேதா, நாசர், இளங்கோ குமரவேல், காளி வெங்கட் ,பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், அமீர் அலி ஷேக் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரலாற்று பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தின் இப்பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.