
தெலுங்கில் மிகவும் பிரபலமான முன்னணி பாடகிகளில் ஒருவர் தான் பாடகி மம்தா மோகன்தாஸ். இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தமிழிலும் ஒரு சில படங்களில் மட்டும் பாடியுள்ளார். 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மாயூகம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சிலப்பதிகாரம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அதை தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் “மம்தா மோகன்தாஸின் அவல வாழ்க்கை” என்ற தலைப்பில் கீத்து நாயர் என்பவர் சோசியல் மீடியா ஒரு பொய்யான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மம்தா மோகன் தாஸ் யார் நீங்கள்?.. உங்களுக்கு அதிகமான வியூவர்ஸ் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா?.. தயவு செய்து இந்த மாதிரியான மோசமான காரியங்களை செய்யும் நபர்களின் பக்கத்தை பின்தொடராதீர்கள் என்று மம்தா மோகந்தாஸ் கூறியுள்ளார்.