
தமிழ் சினிமாவின் பழம்பெறும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் மறைந்த நடிகை மனோரமா. இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘ஆச்சி’ என அழைக்கப்படுகிறார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் என்டிஆர் என பல முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை மனோரமா.
இவர் 5000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவர் 1958 இல் வெளியான ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக திரையுலகில் முதன்முதலாக கால் பதித்தார்.
இதைத்தொடர்ந்து களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, பாலும் பழமும் ,பார் மகளே பார், திரு விளையாடல், அன்பே வா என இவர் பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம் என பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பின் மூலம் தனி முத்திரை பதித்தார் நடிகை மனோரமா.இவர் படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
சினிமா உலகில் நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும்தான் என்ற நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனை படைக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை மனோரமா.
நடிகை மனோரமா சபா நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருடன் அந்த குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ் எம் ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை மனோரமாவுக்கு பூபதி என்ற மகனும் உள்ளார்.இவர் தனது 78 வது வயதில் 2015ல் மாரடைப்பால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார்.
தற்பொழுது இவர் மகனோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.