மறக்க முடியாத அனுபவம்…. “வணங்கான்” படத்தின் கடைசி நாள்…. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்த அருண் விஜய்…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தின் கடைசி நாள் சூட்டிங் ஸ்பாட்டின் போது எடுத்த புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

   

இயக்குனர் பாலா முதலில் நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க இருந்த திரைப்படம் தான் வணங்கான். பூஜை போட்டு தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் சில தினங்களில் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.

மேலும் இயக்குனர் பாலாவும், சூர்யா இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தாத காரணத்தினால் இப்படத்திலிருந்து விலகுவதாகவும், விரைவில் வேறு ஒரு நடிகரை வைத்து படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தை மீண்டும் இயக்க தொடங்கினார் இயக்குனர் பாலா.

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்க உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்படம் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.