
தமிழ் சினிமாவில் பொங்கல் ஸ்பெஷலாக சில படங்கள் வெளியாகியதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் படங்கள் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் தான். இதில் குழந்தைகளை கவரும் வண்ணம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலானை குழந்தைகள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் கேரளாவில் அயலான் படத்தை 75 லட்சத்துக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வாங்கியும் அந்த அளவு படம் ஓடவில்லை என கூறப்படுகிறது.
மேலும் போஸ்டருக்கு ஆகிய செலவு கூட வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் 103 திரையரங்குகளில் இப்படம் அதிகமான தியேட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படம் குழந்தைகள் பார்க்கக்கூடிய ஹிட்ஸ் படமாக இருந்தாலும், குழந்தைகள் கூட தியேட்டருக்கு வரவில்லை எனவும், கேரளாவில் அயலான் படம் தோல்வியை பெற்றதாக வலை பேச்சாளர் பிஸ்மி கூறியுள்ளார்.