
ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார். இதற்காக சடங்குகள் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. மைசூர் சிற்பி தயாரித்த குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு கருவறையில் நிறுவப்பட்டது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் 136 சனதான பாரம்பரியங்களைச் சேர்ந்த 25 ,000ஆயிரம் இந்து தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக பத்தாயிரம் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.இந்நிகழ்விற்க்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஆலியா பட், ரன்பீர், ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின், போன்ற சினிமா மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் போது முதல் நாள் விருந்து செலவு அனைத்தையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது. முதல் நாளில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், வெளிநாட்டு அதிகாரிகள் என சுமார் 800 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிகிறது .அது மட்டும் இல்லாமல் அன்று ஒரு நாள் விருந்து செலவு மட்டும் 50 கோடி வரை ஆகலாம் என மதிப்பிட்டுள்ளர்.