
சின்னத்திரை டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற டிவி சீரியல் என்றால் அது விஜய் டிவி சீரியல் தான்.
தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ .இந்த சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர் தீபக்.
இவர் முதல் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம்பஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.
இவர் விஜய் டிவி, சன் டிவி ,ஜீ தமிழ் ,போன்ற டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ்’ என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தமிழில் இளசு புதுசு ரவுசு, சரோஜா ,முன்தினம் பார்த்தேனே, உயர்திரு 420 ,இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஆல்பம்’ படத்தில் ஆர்யா ராஜேஷ்க்கு டப்பிங் கொடுத்துள்ளார்.இதை தொடர்ந்து விஸ்வ துளசி, உயிரெழுத்து போன்ற திரைப்படங்களுக்கும் இவர் டப்பிங் கொடுத்துள்ளார்.
இவர் நடிகர், தொகுப்பாளர் , டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமைகளைக் கொண்டு மக்கள் மத்தியில் நிலைத்து நின்றார்.இவர் தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்தார் .
என் ஆட்டோகிராப் ,நண்பேண்டா, சூப்பர் மாம், நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார்.
இவர் படங்களின் நடித்திருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது சின்னத்திரை சீரியல் தான்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
தீபக் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடித்து வருகிறார்.சிவரஞ்சனி என்பவரை 2008 ஆம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
தற்போது தன் மனைவி மகனுடன் இருக்கும் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.