இவரு கூட வாழ்றதுக்கு நீ தனியா இருந்திடலாம்.. ரட்சிதாவின் கணவர் குறித்து தாறுமாறா கிழித்த நடிகை..!!

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர் சரவணன் மீனாட்சியின் இரண்டாவது சீசனில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதைத் தொடர்ந்து, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை போன்ற தொடர்களில் நடித்தார். இவர் அறிமுகமான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டிருந்த இவரின் திருமண வாழ்வில் விரிசல் விழுந்தது. தற்போது தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பங்கேற்றிருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7-ல் அவரின் கணவர் தினேஷ் பங்கேற்றுள்ளார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

   

மேலும், அவரின் ரசிகர்கள் பலர் தினேஷ் மிகவும் நல்லவர். அவருடன் வாழ அவரின் மனைவிக்கு கொடுத்து வைக்கவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த சில வாரங்களாகவே விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது தினேஷ் குறித்து பேசிய விசித்ரா வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் தினேஷ் பற்றி, இது எல்லாம் இருந்தென்ன பிரயோஜனம், வாழ்ந்து என்ன பிரயோஜனம் என விசித்ரா தாறுமாறாக பேசி தாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள், விட்டுட்டு ஓட வேண்டியது தான். அதனால் தான் நடிகை ரட்சிதா இவரை விட்டு சென்றுவிட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் நடிகை ரட்சிதாவிடம் திரும்பி வந்திடாதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கையை நடத்து. தனியா வாழ்ந்துட்டு போயிடலாம். ஆனால் இந்த மாதிரி ஆள் கூட வாழ முடியாது எனவும் பேசியுள்ளார்.