
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் சில போட்டியாளர்கள் தற்போது காதல் ஜோடியாக மாறி இருக்கின்றனர்.
அவர்கள் போட்டியில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அந்த லிஸ்ட்டில் ஐஷு மற்றும் நிக்சன் இணைந்துள்ளனர். இவர்கள் முதலில் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் தற்போது காதல் ஜோடியாக மாறி, தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லை மீறி நடந்து வருகின்றனர். அண்மையில் இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதனை அறிந்த கமல் பிக் பாஸ் வீட்டில் மைக்கை மறைத்துக் கொண்டு இப்படி பேசுவதற்கு பதில் வெளியே வந்து பேசுங்கள் என்று நிக்ஸனை எச்சரித்துள்ளார். மேலும் இன்று போல் மறுபடியும் செய்தால் எலிமினேட் செய்யப்படுவீர்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.